ETV Bharat / state

சாணம் பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்ட சிறுமி

திருப்பூர்: சிறுவன் காதலிக்குமாறு தொல்லைக் கொடுத்ததால் விரக்தியடைந்த சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி தற்கொலை
author img

By

Published : May 14, 2019, 11:58 PM IST

திருப்பூர் மாவட்டம், ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவரது வீட்டுக்கு 16 வயது சிறுவன் ஒருவன் அடிக்கடி வந்துள்ளார். அப்போது மணிகண்டனின் வீட்டருகே இருந்த சிறுமி ஒருவருடன், சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அந்த சிறுவனிடம் சிறுமி பேசுவதை தவிர்த்துள்ளார். இதையறிந்த சிறுவன் தன்னை காதலிக்குமாறு சிறுமியை வற்புறுத்தியதால், சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிறுவன் விடாமல் வற்புறுத்தியதால், விரக்தியடைந்த சிறுமி இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சாணம் பவுடரை கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் ஒடிவந்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (22). இவரது வீட்டருகே 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். மணிகண்டன் வீட்டுக்கு அவருக்கு தெரிந்த 16 வயது சிறுவன் ஒருவன் அடிக்கடி நட்பு ரீதியில் வந்து சென்றுள்ளார்.
இந்த ரீதியில் அந்த 17 வயது சிறுமியுடன் சிறுவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.அதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன் சிறுவனுடன் பழகுவதை சிறுமி நிறுத்திக் கொண்டார். இதனால் அதிருப்தியடைந்த அந்த சிறுவன் தொடர்ச்சியாக தன்னைக் காதலிக்குமாறு கூறி வந்துள்ளார். இதனால் சிறுமி மன பாதிப்பில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் அந்த 16 வயது சிறுவன்,மணிகண்டனும் சிறுமியிடம் அவரை காதலிக்குமாறு வற்புறுத்தியாக தெரிகிறது. இதனால் மேலும் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி நேற்று முன்தினம் இரவு வீட்டில் சாணிப் பவுடரைக் குடித்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் பலனில்லாமல், சிறுமி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக மத்திய காவல் நிலைய போலீஸார்,சிறுவர் மணிகண்டன் மற்றும் 16 வயது சிறுவனை கைது செய்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.