ETV Bharat / state

கண்வலி மூலிகை விதையின் விலை அதிரடியாக சரிவு; விவசாயிகள் அதிர்ச்சி! - thiruppur

திருப்பூர்; கண்வலி மூலிகை விதையின் விலை ஒரே மாதத்தில் ரூ.1000 குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/13-May-2019/3266090_thirupur.mp4
author img

By

Published : May 14, 2019, 10:33 AM IST

திருப்பூர் மாவட்டம், மூலனூர் மற்றும் வெள்ளக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் செங்காந்தள் எனும் கண்வலி மூலிகை விதை சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தோட்டக்கலைத் துறையின் மருத்துவ பயிராக உள்ளதோடு, உற்பத்தி பெருக்கத்துக்கு அரசு சார்பில் மானிய உதவிகளும் வழங்கப்படுகிறது. இந்த கண்வலி மூலிகை விதை புற்றுநோய்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பெருளாக உள்ளதால் ஒரு கிலோ விதை ரூ.3500 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், மூலனூர் விவசாயிகள் ஆர்வமாக செங்காந்தள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செங்காந்தள் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது கண்வலி மூலிகை விதை அறுவடை முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் வரை ரூ.3500 க்கு வாங்கப்பட்ட விதை தற்போது ரூ.2000 ஆக விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் ஏக்கருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் செலவு செய்து விதைகளை உற்பத்தி செய்துள்ள நிலையில், இடைத்தரகர்கள் வேண்டுமென்றே விலையை குறைத்து வாங்க முயற்சிப்பதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஆட்சியரின் உத்தரவின் பேரில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ட்டுறவு சங்கங்களில் பொருளீட்டு கடன் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது பொருளீட்டு கடன் மறுக்கப்படுவதால் விவசாயிகள் விதையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.ஒரு நிலையான விலையை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செங்காந்தள் மலர்
இதனை அங்கீகரிக்கப்பட்ட பயிராக மாற்றுவதுடன், கூட்டுறவு சங்கங்களில் பொருளீட்டு கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஒரே மாதத்தில் ரூ.1000 விலை சரிவு – கண்வலி விதை உற்பத்தி விவசாயிகள் அதிர்ச்சி

திருப்பூர் மாவட்டம் மூலனூர் மற்றும் வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் செங்காந்தள் எனும் கண்வலி விதை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது.கண் வலி விதை அறுவடை பணிகள் முடிந்துள்ள நிலையில் கிலோவுக்கு ரூ.ஆயிரம் வரை விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

புற்றுநோக்கான மருந்து தயாரிப்பில் முக்கிய பெருளாக உள்ள கோல்சிசின் எனும் வேதிப்பொருள் இதன் விதைகளில் இருந்து எடுக்கப்படுவதால் ஒரு கிலோ விதை ரூ.3500 வரை கொள்முதல் செய்யப்படுவதால் மூலனூர் விவசாயிகள் ஆர்வமாக செங்காந்தள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் மூலனூர் வெள்ளகோவில் தாராபுரம் பகுதிகளில் மட்டும் கடந்த ஆண்டு 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் செங்காந்தள் சாகுபடி செய்யப்பட்டு கண்வலி விதை அறுவடை முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் வரை ரூ.3500 க்கு வாங்கப்பட்ட விதை தற்போது 2000 ரூபாய்க்கு வியாபாரிகள் விலை கூறுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏக்கருக்கு சுமார் 5 முதல் 8  லட்சம்  செலவு  செய்து விதைகளை  உற்பத்தி செய்யும் நிலையில்,இடைத்தரகர்கள் கூட்டு சேர்ந்து வேண்டுமென்றே விலையை குறைத்து வாங்க முயற்ச்சிப்பதால் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருப்பூர் ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூட்டுறவு சங்கங்களில் பொருளீட்டு கடன் கொடுக்கப்பட்டதாகவும்,ஆனால் தற்போது பொருளீட்டு கடன் மறுக்கப்படுவதால் விவசாயிகள் விதையை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.

மேலும் இவ்வாறான நிலையற்ற விலையினை கட்டுப்படுத்தி நிலையான ஒரு விலையினை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுப்பதோடு,இதனை அங்கீகரிக்கப்பட்ட பயிராக மாற்றுவதுடன்,கூட்டுறவு சங்கங்களில் பொருளீட்டு கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேட்டி : பழனிச்சாமி – விவசாயி,கிழாங்குண்டல்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.