குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே அரசியல் இயக்கங்கள் போராடி வருகின்றன. இந்நிலையில், திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
மேலும், தடையை மீறி ரயில் மறியலில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர். இதனையடுத்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். திட்டமிட்டபடி தமுமுகவினர் தடையை மீறி ரயல் நிலையத்திற்குள் நுழைந்து தண்டாவளத்தில் இறங்கி மறியிலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து காவலர்களுக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் மறியிலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டவர்களைக் காவலர்கள் கைது செய்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் - மக்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி!