ETV Bharat / state

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலை நிறுத்தம் - பருத்தி ஏற்றுமதி தடை

திருப்பூர்: நூல் விலை உயர்வு, பருத்தி ஏற்றுமதி தடை உள்ளிட்டப் பல கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Tirupur baniyan industry strike for demanding several things

author img

By

Published : Mar 15, 2021, 12:47 PM IST

திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நூல் தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று மாதங்களில் 70 ரூபாய் வரை நூல் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பின்னலாடைத் துறை மற்றும் அவை சார்ந்த தொழில்கள் கடும் நஷ்டம் அடைந்து வருகின்றன.

இதையடுத்து நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக்கோரியும், பருத்தி மற்றும் நூல் ஆகியவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்து, உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் எனக்கோரியும், பருத்தியை மீண்டும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tirupur Knitting industry strike for demanding several things
பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

10 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னை தொடர்புடையது என்பதால் மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் விதமாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் டீமா, சைமா என அனைத்து பின்னலாடை சங்கம் மற்றும் தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தம்

இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் திருப்பூரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக 300 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிப்பு ஏற்படுமென பின்னலாடை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.