ETV Bharat / state

மண் கடத்தலை தட்டிக் கேட்ட அலுவலரை தாக்கிய இருவர் கைது!

திருப்பூர்: மணல் கடத்திவரப்பட்ட லாரியை சோதனை செய்த நில வருவாய் ஆய்வாளரை தாக்கிய லாரி ஓட்டுநர் மற்றும் லாரியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

tirupur in a sand scam enquiry lorry owner, driver arrested for assualting Land Revenue officer
நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தி
author img

By

Published : Mar 4, 2020, 10:38 PM IST

திருப்பூர் நல்லூர் நில வருவாய் ஆய்வாளராக பணியாற்றிவருபவர் சிவசக்தி. இவருக்கு புதுப்பாளையம் பகுதியில் கிராவல் மண் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு மண் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை நிறுத்தி ஓட்டுநர்களிடம் விசாரணை செய்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொடுவாய் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுப்புக்குட்டியும் அவரது மகன் இருவரும் சேர்ந்து வருவாய் ஆய்வாளரை தாக்கியதாகவும் அவர்கள் வந்த காரை கொண்டு சிவசக்தியின் காலில் ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. மேலும், இதனால் பணியில் பாதுகாப்பு இல்லை எனக் கண்ணீருடன் கூறிய சிவசக்தி, சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை நல்லூர் காவல் நிலையத்தில் சமர்ப்பித்து புகார் அளித்துள்ளார்.

அதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி உரிமையாளர் சுப்புக்குட்டியும், லாரி ஓட்டுநர் சதிஷ்குமார் என்பவரையும் கைது செய்துள்ளனர். மேற்படி சுப்புக்குட்டியின் மகனும் மற்றொரு ஓட்டுநரையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

சிசிடிவி காட்சி பிறகு நில வருவாய் ஆய்வாளர் சிவசக்தி பேட்டி

இதையும் படிங்க: கடத்தி வரப்பட்ட11 குழந்தைகளைக் காப்பாற்றிய ஹைதராபாத் போலீஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.