ETV Bharat / state

கல்லூரிப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு! - Tiruppur Women accident dead

திருப்பூர்: திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தவர்கள் மீது தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் ஒரு பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tiruppur Women accident by collage bus
author img

By

Published : Oct 30, 2019, 4:41 PM IST

திருப்பூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் சிவன்மலை பகுதியில் நடைபெறும் திருமணத்தில் பங்கேற்பதற்காக, தனது மாமியார் பார்வதியை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

திருப்பூர் சந்திராபுரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரிப் பேருந்து மோதியதில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு இருவரும் கீழே விழுந்தனர். பார்வதியின்மீது பேருந்து ஏறியதில் தலை நசுங்கி அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதைப் பார்த்த அந்தப் பகுதியினர், உடனடியாக பேருந்தை சிறைப்பிடித்தனர். காயமடைந்த கருப்பசாமியை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், பார்வதியின் உடலை ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தலை நசுங்கி உயிரிழந்த பெண்

விபத்துக்குக் காரணமான தனியார் கல்லூரிப் பேருந்து ஓட்டுநர், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமணத்திற்கு செல்லும் வழியில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: சுகப்பிரசவத்திற்குப் பிறகு உயிரிழந்த தாய்; மருத்துவமனையில் நடந்தது என்ன?

Intro:திருப்பூரில் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்தவர்கள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Body:திருப்பூர் கல்லாங்காடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி இவர் தனது மாமியார் பார்வதி சிவன் மலை பகுதியில் நடைபெறவுள்ள திருமணத்திற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார் . திருப்பூர் சந்திராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் நிலைதடுமாறிய கருப்புசாமி கீழே விழுந்தார். இதில் பின்னால் அமர்ந்திருந்த மாமியார் பார்வதி கீழே விழுந்ததில் அவர் மீது பேருந்து மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இதை பார்த்த அந்த பகுதியினர் உடனடியாக பேருந்தை சிறைபிடித்து காயம் பட்டிருந்த கருப்புசாமி உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து சாலை விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ‌.விபத்துக்கு காரணமான தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். திருமணத்திற்கு செல்லும் வழியில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.