கடந்த இரண்டு தினங்களுக்கு முன் திருப்பூர் மாவட்டத்தில் ஏடிஎம் இயந்திரத்தை ஒரு கும்பல் திருடிச் சென்றது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏழு சிறப்பு தனிப்படைகள்:
இதனையடுத்து திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் உத்தரவின் பேரில், திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், காங்கயம் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில், ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், காங்கேயம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், வெள்ளக்கோயில் காவல் ஆய்வாளர் பார்த்திபன், ஊத்துக்குளி சார்பு ஆய்வாளர்கள் முருகேசன், கோபால், காமராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வேலுச்சாமி, மதியழகன் கொண்ட ஏழு சிறப்பு தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தநிலையில் நேற்று (மார்ச் 2) மாலை ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு குற்றவாளிகள் பிடிபட்டனர்.
இந்நிலையில், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்த தனிப்படையினரை மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் தினகரன் இன்று (மார்ச் 3) காலை பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க:ஏடிஎம் இயந்திர கொள்ளை வழக்கு: வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கைது!