ETV Bharat / state

அரசின் நடவடிக்கையால் மூடப்பட்ட நிறுவனங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்! - சிக்கலில் பின்னலாடை நிறுவனங்கள்

திருப்பூர்: பின்னலாடை துறையினர் மீது விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்புகள் மற்றும் சலுகை குறைப்பு நடவடிக்கையால் கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

industries
author img

By

Published : Sep 20, 2019, 6:47 PM IST

பின்னலாடை உற்பத்தியில் திருப்பூர் மாவட்டத்திற்கு தேசிய அளவில் முக்கியத்துவம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படுகிறது. 18,000 கோடி ரூபாய் அளவில் உள்நாட்டு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதிலிருந்து சில நிறுவனங்கள் மீண்டாலும், அடுத்ததாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி, பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

மூலப்பொருளான பிளாஸ்டிக் கவர்களுக்கு 18 விழுக்காடு உள்ளிட்ட சேவைகளுக்கு 12% என விதவிதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் விலை நிர்ணயத்தில் பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஏற்றுமதி செய்வதற்கு ஆறு மாத காலம் அவகாசம் உள்ள நிலையில், பருத்தி உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்ததால் விலை நிர்ணயத்தில் பின்னலாடை நிறுவனங்கள் கடும் போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது.

இதில் இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், வியட்நாம், கம்போடியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக குறைந்த விலையில் பின்னலாடை ஏற்றுமதி செய்து வந்ததால் அந்த போட்டியை சமாளிக்க இந்திய நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

நட்டத்தில் பின்னலாடை நிறுவனங்கள்; சிறப்புத் தொகுப்பு

இதற்கிடையே, எக்ஸ்போர்ட் ஃப்ரம் இந்தியா ஸ்கீம் முறையில் 4 விழுக்காடு வழங்கப்பட்டு வந்த ஊக்கத் தொகை, உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகினர். இதன் காரணமாக பின்னலாடை உற்பத்திகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதுகுறித்து, திருப்பூர் பெரியார் காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில், ‘கடந்த 35 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது சலுகைகள் குறைப்பு மற்றும் மூலப் பொருட்களின் நிலையற்ற தன்மை காரணமாக முறையான விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் தங்களுக்கு முன்பு இருந்ததை போல 11 விழுக்காடு வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுமதி தொடர்ந்து செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஓராண்டாக புதிய ஆர்டர்கள் எடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும், மூன்று மாதங்களாக முழுமையாக நிறுவனத்தை மூடிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும்போது தொழில் நிறுவனங்களில் பாதிக்காத அளவில் அந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

திருப்பூர் முழுவதும் ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகள் இருந்து வந்த நிலையில், தற்போது எந்த நிறுவனத்திலும் வேலை கிடைப்பதில்லை என்று பணியாளர்கள் புலம்பும் அளவிற்கு தற்போதைய சூழல் இருக்கிறது.

Intro:திருப்பூர் பின்னலாடை துறையினர் மீது விதிக்கப்பட்டுள்ள வரிவிதிப்புகள் மற்றும் சலுகைகள் குறைப்பு நடவடிக்கையால் கடந்த ஓராண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளது இது குறித்து அதிர்ச்சியூட்டும் செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

Body:இந்தியாவைப் பொறுத்த வரையிலும் திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில் தலைநகராக விளங்கிவருகிறது இங்கு ஆண்டுதோறும் 2,000 கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடை ஏற்றுமதி செய்யப்படும் 18,000 கோடி ரூபாய் அளவில் உள்நாட்டு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது இதிலிருந்து மீண்டு சில நிறுவனங்கள் திரும்பினாலும் அடுத்ததாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது மூலப்பொருளான நூற்றுக்கு ஐந்து சதவிகிதம் பெட்ரோலியம் பொருளான பிளாஸ்டிக் கவர்களுக்கு 18 சதவிகிதம் உள்ளிட்ட சேவைகளுக்கு 12% என விதவிதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு களால் விலை நிர்ணயத்தில் பின்னலாடை நிறுவனங்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது ஏற்றுமதி செய்வதற்கு 6 மாத காலம் அவகாசம் உள்ள நிலையில் பருத்தி உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்ததால் விலை நிர்ணயத்தில் கடும் போட்டியை பின்னலாடை நிறுவனங்கள் சந்திக்க வேண்டியிருந்தது இதில் இந்தியாவின் போட்டி நாடுகளான சீனா பாகிஸ்தான் பங்களாதேஷ் வியட்நாம் கம்போடியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு சலுகைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக குறைந்த விலையில் பின்னலாடை ஏற்றுமதி செய்து வந்ததால் அந்த போட்டியை சமாளிக்க இந்திய நிறுவனங்களும் விலையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் இந்நிலையில் ஏற்றுமதி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வந்த டிராபிக் தொகையும் ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டது 7 சதவிகிதம் அளவிற்கு வைக்கப்பட்ட நிலையில் எக்ஸ்போர்ட் ப்ரம் இந்தியா ஸ்கீம் என்ற முறையில் 4 சதவிகிதம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வந்தது இந்த ஊக்கத்தொகை உலக வர்த்தக அமைப்பின் கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த ஜூலை 31 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டுள்ளது இதனால் ஏற்றுமதியாளர்கள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாயினர் இதன் காரணமாக பின்னலாடை உற்பத்திகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது இதுகுறித்து திருப்பூர் பெரியார் காலனி பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர் கூறுகையில் கடந்த 35 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது சலுகைகள் குறைப்பு மற்றும் மூலப் பொருட்களின் நிலையற்ற தன்மை காரணமாக முறையான விலை நிர்ணயம் செய்ய முடியாத சூழல் உள்ளதாகவும் தங்களுக்கு முன்பு இருந்ததை போல 11 சதவிகித வரிச்சலுகைகள் கொடுக்கப்பட்டால் மட்டுமே ஏற்றுமதி தொடர்ந்து செய்ய முடியும் என்றும் விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு அதிக அளவில் வழங்கக்கூடிய துறை ஆயத்த ஆடை தான் என்றும் தெரிவித்தார் மேலும் கடந்த ஓராண்டாக புதிய ஆர்டர்கள் எடுக்க முடியாமல் தவித்து வந்ததாகும் தொடர் நஷ்டத்தை எடுத்து தற்போது மூன்று மாதங்களாக முழுமையாக நிறுவனத்தை மூடி வைத்து இருப்பதாகவும் தெரிவித்தார் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் பொழுது தொழில் நிறுவனங்களில் பாதிக்காத அளவில் அந்த திட்டங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார் திருப்பூர் முழுவதும் ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகள் இருந்து வந்த நிலையில் தற்போது எந்த நிறுவனத்திலும் வேலை கிடைப்பதில்லை என்று பணியாளர்கள் புலம்பும் அளவிற்கு தற்போதைய சூழ்நிலை உள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.