ETV Bharat / state

காவலர் லஞ்சம் கேட்டதால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

author img

By

Published : Dec 17, 2019, 6:46 PM IST

திருப்பூர்: சரக்கு வாகனம் ஓட்டி வந்த இளைஞரிடம் காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

மதுரை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் தனது மனைவி பிரியாவுடன் திருப்பூரில் உள்ள கூலிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். சரக்கு வாகன ஓட்டுநரான இவர் சர்க்கார் பெரியபாளையத்திலிருந்து அவரது வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கூலிபாளையம் நால்ரோடு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அர்ஜுனனின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.

அர்ஜுனன் அனைத்து ஆவணங்களையும் காவலர்களிடம் கொடுத்துள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் காவலர்கள் அர்ஜுனிடம் 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர்.

அர்ஜுனன் தரமறுத்ததால் காவலர்கள் அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அர்ஜுனன் வாகனத்தில் இருந்த டீசலை தன்மேல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் காவலர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் உதவி கண்காணிப்பாளர் செல்வம், ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டி ஆகியோர் அர்ஜுனனை விசாரணைக்காக ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

லஞ்சம் கேட்ட காவலருக்கு எதிராக இளைஞர் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பெண் அவமானப்படுத்தியதில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மீனவர்

Intro:ஆவணங்களை சரியாக இருந்தாலும் 200 ரூபாய் லஞ்சம் கொடுத்தே ஆகவேண்டும் காவலருக்கு எதிராக தன் மேல் டீசல் ஊற்றிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரால் பரபரப்பு.Body:மதுரை மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் அர்ஜுன் இவர் தனது மனைவி பிரியா என்பவருடன் திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார் இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார் இந்நிலையில் சர்க்கார் பெரியபாளையத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி அர்ஜுன் வந்து கொண்டிருந்தார் அப்போது கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் சோதனைச்சாவடியில் சோதனை மேற்கொண்டு வந்த காவலர்கள் அர்ஜுன் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை கேட்டுள்ளனர் அனைத்து ஆவணங்களையும் அர்ஜுன் சமர்ப்பித்த பிறகு 200 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த நிலையில் ஏன் பணம் தரவேண்டும் என அர்ஜுன் திருப்பி கேட்டதற்கு போலீசார் தகாத வார்த்தைகளால் அர்ஜுனை திட்டியுள்ளனர் இதனால் ஆத்திரமடைந்த அர்ஜுன் வாகனத்திற்கு ஊற்ற வைத்திருந்த டீசலை தனது மேல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதனை அடுத்து போலீசார் அவரை தடுத்தனர் ஆத்திரம் அடங்காத அர்ஜுன் சாலையின் நடுவே சென்று அமர்ந்தார் இதனை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து விரைந்து வந்த ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டி மற்றும் காங்கேயம் உதவி கண்காணிப்பாளர் செல்வம் உள்ளிட்ட போலீசார் அர்ஜுனை விசாரணைக்காக ஊத்துக்குளி காவல் நிலையம் அழைத்து சென்றனர். லஞ்சம் கேட்ட காவலருக்கு எதிராக இளைஞர் ஒருவர் தன்மேல் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.