தேர்தல் நெருங்குவதையொட்டி 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் திமுக எம்பி கனிமொழி கடந்த 2 நாள்களாக திருப்பூர் மாவட்டத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக இன்று (பிப்ய11) அவிநாசி மற்றும் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ரேஷன் கடைகளில் தரமில்லாத மோசமான பொருள்களை வழங்குவதாக பெண்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நியாய விலைக்கடைகள் நியாய விலைக்கடைகளாக செயல்படுவதில்லை.
மருத்துவக் கல்லூரிகள் ஆட்சியில் இருப்பவர்களால்தான் முன்னெடுப்பு எடுக்கப்பட்டு கொண்டு வர முடியும். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டப்பட்டு இரண்டு வருடமாகியும் பணி தொடங்கப்படவில்லை. பத்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாததால் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகிறோம். பத்து வருட ஆட்சியிலிருந்து தற்போது குறை தீர்க்கும் மையம், இலவச தொலைபேசி எண் அறிவிக்க காரணம் ஏன்?" என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சென்னை மெரினா கடற்கரையில் மூழ்கிய மாணவர்கள்: ஒருவர் இறந்தநிலையில் மீட்பு