ETV Bharat / state

திரும்பப் பெறப்பட்ட அறிக்கையால் பயணிகள் நிம்மதி! - Ten rupees

திருப்பூர்: போக்குவரத்துப் பணிமனையில் நடத்துநர்கள் பயணிகளிடம் பத்து ரூபாய் நாணயங்கள் பெறக் கூடாது என ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை குழப்பத்தை உண்டாக்கியதால் திரும்பப்பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலம்
author img

By

Published : Jun 23, 2019, 5:21 PM IST

கடந்த 21ஆம் தேதி திருப்பூர் மாவட்ட போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டலத்தில் நடத்துநர்கள் பயணிகள் தரும் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது.

இந்த சுற்றறிக்கை சமூக வலைதளங்களில் வைரலாகபரவியது. மேலும், பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவது குறித்த சந்தேகம் ஏற்பட்டது. எனவே, பொதுமக்களிடையே குழப்பத்தை உண்டாக்கிய அந்த சுற்றறிக்கை இன்று திரும்பப்பெறப்பட்டது.

திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலம்

இது குறித்து திருப்பூர் போக்குவரத்துப் பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால் கூறும்போது, ’வங்கியில் பணம் செலுத்தும்போது பத்து ரூபாய் நாணயங்களால் இடையூறுகள் ஏற்பட்டன. அதனைத் தவிர்க்க திருப்பூர் மாவட்ட போக்குவரத்து இரண்டாவது மண்டல பணிமனையில் சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அச்சுற்றறிக்கை பொதுமக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியதால் திரும்பப் பெறப்பட்டது’ என்றார்.

Intro:திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் நடத்துநர்கள் பயணிகளிடம் பத்து ரூபாய் நாணயங்கள் பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை திரும்பப்பெறப்பட்டது

Body:திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் நடத்துனர்கள் பயணிகள் தரும் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு ஒட்டப்பட்டிருந்த சுற்றறிக்கை கடந்த 21-ஆம் தேதி ஒட்டப்பட்டிருந்தது.இந்த சுற்றறிக்கை சமூகவலைதளங்களில் பரவியதை அடுத்து பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவது குறித்த சந்தேகம் ஏற்பட்டது.இந்நிலையில் அந்த சுற்றறிக்கையை என்று திரும்பப் பெறப்பட்டது . இதுகுறித்து திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டல மேலாளர் தனபால் தெரிவித்தபோது வங்கியில் பணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்ததாகவும் ஆனால் அது பொது மக்களிடம் தவறான கருத்தை பதிவு செய்து அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அதனை திரும்பப் பெறப்பட்டதாக தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.