மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியிறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு எதிரான சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக்கோரி திருப்பூர் மாவட்டம் மங்களத்தில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமா அத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில செயலாளர் செங்கோட்டை பைசல் தலைமை தாங்கினார்.
இதில் இஸ்லாமிய பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக்குழுவின் பெயரில் ரூ.2 கோடி மோசடி: துணை ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!