திருப்பூர், பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விகி செயல்பட்டு வருகிறது. இதில், திருப்பூர் நகர் பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே, ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, உணவைக் கொண்டு செல்ல கி.மீ. 5 ரூபாய் வரை ஸ்விகி நிறுவனம் அதன் ஊழியர்களுக்கு வழங்கி வருகிறது.
ஆனால், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு கி.மீ. குறைந்தபட்சம் 7 ரூபாய் வழங்கப்படுவதாகவும், இதுகுறித்து திருப்பூரில் உள்ள ஸ்விகி நிறுவனத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டிய ஊழியர்கள், ஊதிய உயர்வை வலியுறுத்தி ஸ்விகி நிறுவனம் முன்பாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் சமரசம் செய்ததோடு,
ஸ்விகி நிறுவனத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்த பின், அங்கிருந்து கலைந்து சென்றனர்.