ரஜினிகாந்தின் எழுபதாவது பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நாளைய தினம் ரஜினி ரசிகர் மன்றத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் வந்த ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ' 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரஜினியின் கட்சி குறித்த உறுதியான அறிவிப்பு வெளியாகும். ரஜினி தனித்தே கட்சி தொடங்குவார். யாரையும் சார்ந்திருக்க மாட்டார். அமைச்சர்களின் விமர்சனங்களை ரஜினிகாந்த் எப்போதும் கண்டு கொள்வதில்லை. ரஜினி, கமல் கூட்டணி ரசிகர்களின் மனநிலையைப் பொறுத்து அமையும். திராவிட கட்சிகளுக்கும் ஆதரவாக இருக்கமாட்டார்' இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடுபிடித்தது உள்ளாட்சித் தேர்தல் - மேளதாளத்துடன் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!