ETV Bharat / state

திருப்பூர் ஆட்சியருக்கு ஹேப்பி பர்த்டே சொன்ன சிவகார்த்திகேயன்!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனுக்கு, நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திருப்பூர்
திருப்பூர்
author img

By

Published : Jan 8, 2021, 7:46 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து ட்விட்டை சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வர சமூக வலைத்தளங்களில் வைரலானது.

நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத ஒரு வரை திடீரென வாழ்த்தியிருப்பது குறித்து பலரும் கேள்விகள் எழுப்பியிருந்த நிலையில், அதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கரோனா பரவல் காரணமாக அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அப்போது, பொதுஇடங்களில் நோய் பரவலில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கிருமிநாசனி சுரங்கம் என்று புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரான விஜயகார்த்திகேயனை சேரும் நிலையில், அப்போது அவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

அந்தச் சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும், அவருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது அவரது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.