ETV Bharat / state

உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கு : ஏழு பேர் கைது

author img

By

Published : Sep 26, 2020, 11:45 PM IST

திருப்பூர் : அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணத்திற்காக தாங்கள் கடத்தலில் ஈடுபட்டதை குற்றவாளிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேர்

கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை, திருப்பூர் மாவட்டம், உடுமலை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் புகுந்து கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திச் சென்றனர். அதன்பின் சில மணி நேரத்திலேயே அவரை உடுமலை அருகே உள்ள தளி பகுதியில் கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.

இச்சம்பவத்தில் தப்பியோடிய கடத்தல் கும்பலை காவல் துறையினர் கடந்த மூன்று நாள்களாக தேடி வந்த நிலையில், பிரதீப் (வயது 39), அருண் குமார் (வயது 23), சுரேந்திரன் (வயது 27), வினோத் (வயது 20),செல்வ கணபதி (வயது 23), தாகா (வயது 21),தேவ ராஜுலு (வயது 55) ஆகிய ஏழு பேரை இன்று (செப்.25) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

மேலும், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 447இன் கீழ் அத்துமீறல், சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், ஆள் கடத்தல் போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் கூறுகையில், ”அமைச்சரின் உதவியாளர் தனது சொந்த இடத்தை விற்றுப் பணம் வைத்திருப்பதை அறிந்து, அவரிடம் இருக்கும் பணத்தைப் பறிக்க இந்தக் கடத்தலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவரிடம் பத்து லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால் அவரிடம் பணம் இல்லாததை அடுத்து அவரது கழுத்து சங்கிலி, மோதிரம், ஏடிஎம் கார்ட் ஆகியவற்றைப் பறித்துகொண்டு அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர். தற்போது இந்த ஏழு பேரும் பிடிபட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பணத்திற்காக அமைச்சரின் உதவியாளர் ஒருவர் கடத்தப்பட்டு சில மணி நேரத்திலேயே விடுவிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : 300 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய உதயநிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.