திருப்பூர் நகராட்சி மண்டல இயக்குநர் சரவணகுமார் உத்தரவின்பேரில், தாராபுரம் நகராட்சி ஆணையாளர் சங்கர் பரிந்துரையின்பேரில் நகராட்சி நகர்நல அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் ராஜ்மோகன், அருண் பிரகாஷ், தர்மராஜா, சங்கர் ஆகியோர் ஆடங்கிய சுகாதாரக் குழுவினர் பெரிய கடை வீதி, சர்ச் கார்னர், பொள்ளாச்சி சாலை, உடுமலை சாலை, நகரப்பகுதியில் உள்ள மதுபான கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், தேநீர்க்கடை, பேக்கரிகள், பொரிக்கடை உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கடைகளை ஆய்வுசெய்தனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி குவளை, நெகிழிப்பை உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல்செய்தனர்.
இது குறித்து நகர் நல அலுவலர் லட்சுமி நாராயணன் கூறுகையில், "தாராபுரம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள், கேரி பேக், நெகிழிக் குவளைகள் அதிக அளவில் பயன்படுத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்தன.
அதனடிப்படையில், ஆய்வு மேற்கொண்டதில், இன்று ஒரேநாளில் மட்டும் ஆயிரத்து 500 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன. அத்துடன் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது" என்றார்.
இதையும் படிங்க: வேலூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்திய 5 கடைகளுக்கு அபராதம் விதிப்பு!