திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள வேலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரும் இவரது மகன் தினேஷும் அப்பகுதியில் கல்குவாரி நிறுவனம் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், இவர்களது வீட்டில் உரிய அனுமதியின்றி ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் ஆகிய வெடிபொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஸ்ரீ ராமசந்திரன் தலைமையிலான காவல் துறையினர் சுப்பிரமணியத்தின் வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்தச் சோதனையில், ஆறு பெட்டி ஜெலட்டின் குச்சிகள், ஒரு பெட்டி டெட்டனேட்டர் உள்ளிட்ட 150 கிலோ வெடிமருந்துகள் பதுக்கிவைத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். பின் இவற்றைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் சுப்பிரமணியத்தைக் கைதுசெய்தனர்.
மேலும் சுப்பிரமணியத்திற்கு வெடிபொருள்களை சப்ளை செய்த சீனிவாசன் என்பவரைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
![கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-seizureofgelatindetonator-vis-7204381_16032021181227_1603f_1615898547_226.jpg)
இதையும் படிங்க: பயங்கர வெடி பொருட்கள் வைத்திருந்த மீனவர் கைது..!