திருப்பூர்: நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள குடோன்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக அனுப்பர்பாளையம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் நெருப்பெரிச்சல் பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கெவின் பட்டேல் என்பவரின் குடோனில் சுமார் 800 கிலோ அளவிலான தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து காவல் துறையினர் 800 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், கெவின் பட்டேல் என்பவரை கைது செய்த அனுப்பர்பாளையம் காவல் துறையினர் அவரிடம் இருந்த காரையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி