திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட குப்புசாமிபுரம் பகுதியில் பாதாள சாக்கடையை ரோபோ இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யும் பணியை, திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் குணசேகரன் தொடங்கிவைத்தார்.
கேரளாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ 60 கிலோ எடை கொண்டது, ஆறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனால் தரைக்கு மேல் இருந்தபடி மானிட்டர் மூலம் கண்காணித்து பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய முடியும். இந்த ரோபோ பாதாள சாக்கடை குழாய்க்குள் 6 மீட்டர் தூரத்திற்கு நுழைந்து சாக்கடையை சுத்தம் செய்யும் திறன் கொண்டது.
திருப்பூர் மாநகராட்சியில் 137 கிலோமீட்டர் பாதாள சாக்கடை இந்த இயந்திரம் கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க: வெலிங்டன் கண்டோன்மென்ட்டில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம்!