திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள ஆலத்தூரில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் அந்த நூற்பாலையில் ஜூலை 29ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், வேலூர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.
இன்று (ஆகஸ்ட் 8) அந்த 38 பேரை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைத்தார். மேலும், குழந்தை தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி பணிபுரிய வைத்த நூற்பாலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பூரில் இனி எந்த நிறுவனங்களும் குழந்தை தொழிலாளர்களை பணிபுரிய வைக்கக் கூடாது என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: மதுரையில் 2 குழந்தை தொழிலாளர்கள் உள்பட 5 பேர் மீட்பு!