திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அமைந்திருக்கும் ராமசாமி நகர் பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு என அமைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்டாமல் வெளியே கொட்டுவதால் சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவுகிறது. அந்த பகுதியில் குப்பைத் தொட்டிகள் இருந்தும் குப்பைகளை குப்பை தொட்டிகளில் கொட்டாமல் அலட்சியமாக வெளிய கொட்டுவதன் காரணமாக மக்கள் தங்களுக்குத் தாங்களே சுகாதாரமற்ற சூழல் உருவாக்கியுள்ளனர்.
இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.