தேர்தல் சுற்றுப்பயணம் காரணமாக கோவை மண்டபத்திற்கு வருகை தரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கோவையில் தொழில்துறையினருடனான சந்திப்பை முடித்த பின்பு திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றவுள்ளார்.
பின்பு திருப்பூர் ரயில் நிலையம் முன்புள்ள குமரன் நினைவகம் சென்று திருப்பூர் குமரனுக்கு மரியாதை செலுத்தும் அவர், பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாட உள்ளார் .
அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார். திருப்பூரில் 800க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 16 பேர் கொண்ட மத்திய பாதுகாப்பு பிரிவினரும் ஆய்வு செய்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:பறவைக் காய்ச்சல் எதிரொலி: மீண்டும் சரிந்த முட்டை விலை