ETV Bharat / state

வங்கதேச இளைஞர்கள் மீது பொதுமக்கள் புகார்

திருப்பூர்: சந்தேகப்படும்படியாக இருந்த வங்கதேச இளைஞர்கள் மீது பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

திருப்பூர்
author img

By

Published : May 28, 2019, 11:07 AM IST

தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களும், பனியன் நிறுவனங்களும் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பனியன்களுக்கும், ஆடைகளுக்கும் வெளிநாட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், வெளி மாநிலத்தவரும், வெளி நாட்டினரும் இங்கு தங்கி வேலை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேச இளைஞர்கள் சிலர் நள்ளிரவில் குடித்துவிட்டு குடிபோதையில் வருவதாகவும், அவர்களது நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சந்தேகப்படும்படியாக இருந்த வங்கதேச இளைஞர்கள் மீது பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.சந்தேகப்படும்படியாக இருந்த வங்கதேச இளைஞர்கள் மீது பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் காவல் துறையினர் சந்தேகத்திற்கிடமான 18 வங்கதேச காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விசாரணையில் அவர்களிடம் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), திருப்பூர் வந்ததற்கான நுழைவுஇசைவு (விசா) உள்ளிட்டவை சரியாக உள்ளதா எனவும் சோதனை செய்துவருகின்றனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருப்பூரில் சந்தேகத்திற்கிடமான 18 வங்கதேச இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் வெளி மாவட்ட மாநில மட்டுமல்லாது வெளி நாட்டினரை சேர்ந்தவரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் சிறுபூலுவப்பட்டி அத்திமரத் தோட்டம் பகுதியில் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வங்கதேச இளைஞர்கள் மீது சந்தேகம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து போலீஸார் 18 வங்கதேச இளைஞர்களையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் திருப்பூர் வந்ததற்கான விசா உள்ளிட்டவை சரியாக உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் அவர்கள் கைது செய்யப்படலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.