திருப்பூர் மாநகராட்சிக்குள்பட்ட 18ஆவது வார்டு வாவிபாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபான கடைக்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவந்த சூழலில், மாவட்ட நிர்வாகத்துடன் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கடையை மாற்ற நிர்வாகம் ஒப்புக்கொண்டது. ஆனால், கடை மாற்றப்படாமல் அதே இடத்தில் செயல்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில், இதைக் கண்டித்து வாவிபாளையத்தில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கையில் கறுப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் எனக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.