ETV Bharat / state

பொதுத்தேர்வு மூன்று மணி நேரமாக உயர்வதாக அமைச்சர் அறிவிப்பு!

திருப்பூர்: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

public-exam-time-have-increased-to-3-hours-minister-sengottaiyan
அமைச்சர் செங்கோட்டையன்
author img

By

Published : Feb 28, 2020, 8:58 PM IST

திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளின் அரசுப் பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி வரை நடைபெறும் அதன் முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ஆம் தேதி வரை நடைபெறும் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும். பதினோராம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும் தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியிடப்படும்.

மேலும் இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 10 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும்.

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 பேரும் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேரும் 11ஆம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 119 பேரும் தேர்வு எழுத உள்ளனர். கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டு ஆயிரத்து 12 தேர்வு மையங்களாக உருவாக்கப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

இதையும் படிங்க: 'ஹாக்கி ஆட்டம் பின்னர் பொதுத் தேர்வு பற்றி கருத்து'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.