ETV Bharat / state

திருப்பூரில் சிஏஏ-வுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இருதரப்பினர் குவிந்ததால் பதற்றம் - CAA in protest tirupur

திருப்பூர்: மங்கலம் பகுதியில் சிஏஏ-வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து இருதரப்பினர் குவிந்ததால் பதற்றம் நிலவியது. காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் கூட்டம் கலைக்கப்பட்டது.

tirupur
tirupur
author img

By

Published : Mar 9, 2020, 4:04 PM IST

திருப்பூர் மாவட்டம், மங்கலம் நான்குரோட்டில், நேற்றிரவு இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் அங்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இருதப்பினரும் ஒரே சாலையில் சென்றுவருவதால் வாக்குவாதம் எழுந்ததுள்ளது. மேலும் அங்கு கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் இருதரப்பினர்களிடமும் பேச்சு வார்த்தை நடத்தினர். மூன்று மணி நேரம் தொடர்ந்த பேச்சு வார்த்தையில், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தற்போது அங்கு இயல்புநிலை திரும்பியுள்ளது.

போராட்டத்தின் போது

இதையும் படிங்க: சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவர வேண்டும் - பழ. நெடுமாறன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.