தமிழ்நாடு அரசு பணிகளில் பிற மாநிலத்தவர்களை நியமிப்பதை கண்டித்து பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் உடுமலைப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
![pdk protest against appointment of other state people in TN Govt. jobs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-02-07-dravidar-kazhagam-protest-visuals-tn10019_07062019185042_0706f_1559913642_643.jpg)
பின்னர் கு.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களை வேலையில் அமர்த்துவதன் காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிப்பார்கள். ஏற்கனவே லட்சக்கணக்கானோர் தமிழகத்தில் வேலையின்றி இருக்கும் இந்த தருணத்தில் பிற மாநிலத்தில் இருந்தும் ஒரு சில வேறு தேசங்களில் இருந்தும் குறிப்பாக நேபாளம், பூட்டான், வங்காளதேசம், தான்சானியா போன்ற வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் அரசு பணியில் அமர வைப்பது கண்டிக்கதக்கது. இது மேலும் தொடர்ந்தால் சென்னையில் பெரிய அளவில் போராட்டத்தை நடத்துவோம்" என்றார்.