திருப்பூர் அவிநாசி தனியார் வங்கிக் கிளையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவருபவர் கணேசன். இன்று வழக்கம்போல பணிக்கு வந்த கணேசன், வங்கியின் உணவருந்தும் அறைக்குச் சென்று அதிக நேரம் வெளியில் வராததால் சக அலுவலர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கிய நிலையில் கணேசன் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, கணேசனின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...’78 வயதில் இப்படி ஒரு ஆட்டமா...’! - களைகட்டிய நாடக நடிகர்களின் மாநாடு