குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில நிர்வாகிகள், இஸ்லாமிய இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது சிறுவர்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், காவல்துறையை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படித்து... டெல்லி கலவரம்: 712 எப்ஐஆர்... 200 அக்யூஸ்ட்கள் அரெஸ்ட்!