ETV Bharat / state

உடுமலைப்பேட்டையில் 600கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது! - Arrested for selling cannabis at Udumalaipettai

திருப்பூர்: உடுமலை அருகே கஞ்சா விற்பனை செய்தவர்களிடம் இருந்து 600கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Police seized ganja
author img

By

Published : Oct 22, 2019, 10:05 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் கருப்புசாமி, அருண், அசோக். இவர்கள் மூன்று பேரும் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள பாடகிரி மலைப்பகுதியிலிருந்து அவசர ஊர்தி வாகனம் மூலம் கஞ்சா வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் உடுமலையில் உள்ள தனியார் அவசர ஊர்தி வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது உறவினர் ஆந்திராவில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவரை கோவை மருத்துவமனைக்கு அழைத்து வருவதாகவும் கூறி சென்றுள்ளனர்.

இதையடுத்து, மூன்று நாட்கள் கடந்த நிலையில், அவர்கள் மூவரும், அவசர ஊர்தி வாகனமும் திரும்ப வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவசர ஊர்தி வாகனத்தின் உரிமையாளர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனிடையே, கோவை போதை தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு அவரசர ஊர்தி மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதனையடுத்து, காவல் துறையினர் திருப்பூர், கோவை முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அருண் என்பவரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப்பின், உடுமலை காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள சங்கிலி நாடார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் காவல் துறையினர் சோதனை செய்ததில் 600 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது.

காவல் துறையினர் கஞ்சா பறிமுதல் செய்தனர்

இதனைத் தொடர்ந்து, அங்கு பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அசோக் என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியான கந்தசாமி என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை காவல் துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 70 லட்சம் இருக்கும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:15 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா செடிகள் தீயிட்டு அழிப்பு!

Intro:உடுமலையில் வாடகைக்கு  வீடு எடுத்து  கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது  முக்கிய குற்றவாளி தலை மறைவு  600 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து போதை தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை Body:திருப்பூர் மாவட்டம்  உடுமலை  பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி,அருண், அசோக் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் உள்ள  பாடகிரி மலைப்பகுதியில இருந்து  ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா வாங்கி வந்து இப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர் இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் வழக்கம்போல்  உடுமலையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது உறவினர் ஆந்திராவில்  உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவரை கோவை மருத்துவமனைக்கு கூட்டி வருவதாகவும் சொல்லி எடுத்துச் சென்றுள்ளனர் 3 நாட்களாகியும் ஆம்புலன்ஸை திருப்பிக் கொண்டு வராததால்  சந்தேகமடைந்த ஆம்புலன்ஸ் உரிமையாளர் உடுமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார் இந்நிலையில் கோவை தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது தகவலின்பேரில் அருண் என்பவரை கைது செய்து விசாரணை செய்ததில் உடுமலை காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள சங்கிலி நாடார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் 600 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து  இருப்பது கண்டறியப்பட்டது கோவை போதை தடுப்பு பிரிவு போலீசார் அந்த வீட்டை சோதனை செய்ததில் 600 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இந்த கடத்தல் சம்பவத்தில் உடந்தையாக இருந்த அசோக் என்பவரையும் கைது செய்தனர் முக்கிய குற்றவாளியான கருப்புசாமி தலைமறைவாகிவிட்டார் இவர் உடுமலையில் மூன்றுக்கு மேற்பட்ட  ஆம்புலன்ஸ்  வைத்துள்ளார் இவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்  600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதன் மதிப்பு 70 லட்சம் என்றனர் உயிரை காப்பாற்ற பயன்படும்  ஆம்புலன்சை வைத்து இதுபோன்ற சமூக விரோத கும்பல்கள் ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இந்த குற்றவாளிகளை கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.