ETV Bharat / state

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை- கணக்கில் வராத ரூ.80 கோடி பறிமுதல் - raid on party house

திருப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் வீடு, நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்தது. மூன்று நாள்கள் நடைபெற்ற சோதனையில் இதுவரை 80 கோடி ரூபாய் வரை கணக்கில் வராத பணத்தை வருமானவரித்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி
மக்கள் நீதி மய்யம் கட்சி
author img

By

Published : Mar 19, 2021, 1:00 PM IST

Updated : Mar 19, 2021, 1:51 PM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணைச் செயலாளரும் தொழிலதிபருமான கவின் நாகராஜ் திமுக நகர செயலாளர் தனசேகர் மற்றும் மநீம மாநில பொருளாளர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த இரண்டு நாள்களாக சோதனை நடத்தினர்.

புதன்கிழமை (மார்ச் 17) தொடங்கிய சோதனை இன்று (மார்ச் 19) வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது. மேலும், திருப்பூரில் அனிதா ஹெல்த்கேர் மற்றும் அனிதா டெஸ்காட் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

திருப்பூர் லட்சுமி நகர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் அனிதா டெக்ஸ்காட் என்ற பின்னலாடை நிறுவனம் நடத்தி வருபவர் சந்திரசேகர். இவர், தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கரோனா கவச ஆடைகள், முகக்கவசங்களை உற்பத்தி செய்து அரசுக்கு வழங்கி வருகிறார்.

இவரது நிறுவனத்தில் கடந்த புதன்கிழமையன்று சோதனையை தொடங்கிய வருமான வரி துறை அலுவலர்கள், வெள்ளிக்கிழமை காலை சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் மற்றும் தாராபுரம் பகுதியில் நடக்கும் சோதனையில் நேற்று முன்தினம் எட்டு கோடி ரூபாய், கணக்கில் வராத ரூ. 80 கோடி கண்டறியப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்து, ரூ. 11.50 கோடி பறிமுதல் செய்யபட்டது.

இதில், ஒட்டுமொத்தமாக, ரூ.5.32 கோடி ரூபாய் மற்றும் இன்றும் கணக்கில் வராத கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் செய்யப்படிருப்பதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

இதையும் படிங்க: பணத்தால் ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்கள்’ - டிடிவி தினகரன் சாடல்

Last Updated : Mar 19, 2021, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.