ஊரடங்கு உத்தவின் காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் அவர்களுக்கு இடைக்கும் வகையில் அரசு கரோனா நிவாரணம் வழங்கிவருகின்றது.
இந்நிலையில், திருப்பூர் பூம்புகார், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எவ்வித நிவாரணப் பொருள்களும் கிடைக்கவில்லை என குற்றஞ்சாட்டி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர், அங்கிருந்த காவல் துறையினர் கரோனா சூழலில் பொதுமக்கள் கூட்டம் கூடவேண்டாம் எனக் கூறி அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து அங்குவந்த அலுவலர்கள், இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்க உத்தரவிடுவதாக நம்பிக்கையளித்ததின் பேரில் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: நாகையில் நிவாரண உதவி கேட்டு கூலித் தொழிலாளர்கள் போராட்டம்