ETV Bharat / state

சபரிமலை சீசன்: சென்னை டூ கொச்சி கூடுதல் விமான சேவை.. முழு விவரம் உள்ளே..

கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசன் தொடங்கியதால் சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

சபரிமலை ஐயப்பன், விமானம் கோப்புப் படம்
சபரிமலை ஐயப்பன், விமானம் கோப்புப் படம் (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

சென்னை: சென்னை- கொச்சி - சென்னை இடையே வழக்கமாக 5 புறப்பாடு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் கேரள மாநிலம் ஐயப்பன் கோவில் பக்தர்களுக்காக கடந்த ஆண்டு 7 புறப்பாடு விமானங்கள், 7 வருகை விமானங்களும் என மொத்தம் 14 விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில், இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனை முன்னிட்டு கூடுதலாக விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம் ஐயப்ப பக்தர்கள் இருமுடி பைகளில் தேங்காய் எடுத்துச் செல்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் விமானங்களில் பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சாமியே சரணம் ஐயப்பா! தொடங்கியது சபரிமலை ஐயப்பன் யாத்திரை விரதம்

அந்த அறிவிப்பின்படி தினமும் சென்னையில் இருந்து கொச்சிக்கு புறப்பாடு விமானங்கள் 8, கொச்சியில் இருந்து சென்னைக்கு வருகை விமானங்கள் 8 என மொத்தம் 16 விமானங்களாக அதிகரித்து உள்ளன. இது மட்டும் இன்றி சென்னை- பெங்களூர் - கொச்சி இடையே இணைப்பு விமானங்களாக தினமும் 3 புறப்பாடு விமானங்களும், 3 வருகை விமானங்களும் மொத்தம் 6 விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் ஞாயிறு தோறும் நள்ளிரவு 12.45 மணிக்கு சென்னை- கொச்சி இடையே நேரடி விமான சேவையும் உள்ளது.

இதையடுத்து சென்னையில் இருந்து தினமும் காலை 6.30 மணியிலிருந்து, இரவு 9:25 மணி வரையில், 8 புறப்பாடு விமானங்கள், கொச்சிக்கு இயக்கப்படுகின்றன. அதேபோல் கொச்சியில் இருந்து தினமும் காலை 10.20 மணியில் இருந்து இரவு 11.05 மணி வரையில், 8 வருகை விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஏற்பாடுகள் ஐயப்ப பக்தர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.