கோயம்புத்தூர்: தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று (நவம்பர் 15) ஊட்டியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலையில் ஊர் திரும்பினார். அப்போது ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் கனமழை பெய்துள்ளது.
மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் உள்ள காட்சிமுனை அருகே கார் ஒன்று பக்காவாட்டு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான நிலையில் கிடந்துள்ளது. இதை அந்த வழியாக சென்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பார்த்துள்ளார்.
உடனடியாக உதவியாளர்களுடன் காரில் இருந்து இறங்கிய அமைச்சர், டார்ச் லைட் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான காரில் இருந்து வெளியே மீட்டார்.
இதையும் படிங்க: சீரகமா?..வண்டா? வந்தே பாரத் ரயில் உணவில் கிடந்தது என்ன? - பயணிகள் கேள்வி!
அந்த வாகனத்தில் 4 பேர் காயமடைந்த நிலையில் இருந்துள்ளனர். அவர்களை அமைச்சர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்