ETV Bharat / state

காவல் துறையினரை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல் - People protest against police in tiruppur district

திருப்பூர்: தேவையில்லாமல் சுற்றித்திரிந்த இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்ததால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

author img

By

Published : Apr 23, 2020, 11:54 AM IST

திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் சிலருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதி சீல் வைக்கப்பட்டு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அப்பகுதியில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த சில இளைஞர்களை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையினரை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

இந்நிலையில் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடைகளை திறக்கவும் அனுமதிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் மங்கலம் நால்ரோடு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்யமாட்டோம் என காவல்துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: ஊரடங்கிலும் அடங்காத கடத்தல்... உணவு டெலிவரி வண்டியில் இரண்டு தலை பாம்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.