ETV Bharat / state

'மகன் கொடுமை தாங்கவில்லை' - கருணை கொலை செய்ய கோரி வயதான பெற்றோர் கோரிக்கை! - thirupur crime news

திருப்பூர்: மகனின் கொடுமை தாங்க முடியவில்லை எனவே எங்களை கருணை கொலை செய்ய வலியுறுத்தி வயதான பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர்
திருப்பூர்
author img

By

Published : Mar 2, 2020, 6:44 PM IST

திருப்பூரில் ராயர்பாளையம் பகுதியைச் சேர்ந்த தம்பதி சென்னியப்பன் - பழனியம்மாள் இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருணை கொலை செய்யக்கோரி மனு அளித்தனர் .

அந்த மனுவில், " எங்களுக்கு பழனிசாமி என்ற மகனும் கண்ணம்மாள் என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகின்றனர். ஆனால், எனது மகன் பழனிசாமி எங்களது சொத்துக்களை மாற்றி பிடுங்கிக்கொண்டு கடந்த 10 ஆண்டு காலமாக எங்கள் இருவரையும் கொடுமைப்படுத்துகிறான்.

கருணை கொலை கேட்டு வயதான பெற்றோர் கோரிக்கை

இது குறித்து பல்லடம் காவல் நிலையத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. எங்கள் வீட்டில் மின்சாரத்தை துண்டித்து வைத்துள்ளான். குடிநீர்கூட குடிக்க விடுவதில்லை நாங்கள் வாழவே வழியில்லாமல் தவித்து வருகிறோம். எனவே எங்களுக்குரிய நீதி கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் கருணை கொலை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.

இதையும் படிங்க: தி.மலையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.