ETV Bharat / state

அவினாசி பேருந்து விபத்து: பாலக்காடு எம்.பி. நேரில் ஆய்வு

திருப்பூர்: அவினாசி பேருந்து விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பாலக்காடு எம்.பி. வி.கே. ஸ்ரீகந்தன் தெரிவித்தார்.

பாலக்காடு எம்பி
பாலக்காடு எம்பி
author img

By

Published : Feb 20, 2020, 5:01 PM IST

Updated : Feb 20, 2020, 7:58 PM IST

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேலத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கேரள அரசு சொகுசுப் பேருந்தும், கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு இரு மாநில ஆட்சியர்கள், உயர் அலுவலர்கள், அமைச்சர்கள் எனப் பலர் நேரில் சென்று ஆய்வு செய்துவருகின்றனர்.

driver
கண்டெய்னர் லாரி ஓட்டுநர்

இந்நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வுசெய்த பாலக்காடு எம்பி. வி.கே. ஸ்ரீகந்தன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறுகையில், "இந்த விபத்தில் உயிரிழந்த 19 பேரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. அவர்களில் 15 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்களில் இதுவரை நான்கு பேரின் உறவினர்களிடம் தகவல் அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

தகவல் தெரிந்தவுடனே ஆட்சியர், எஸ்.பி., எம்எல்ஏ, விவசாயத் துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார் ஆகியோர் விபத்து நடைபெற்ற இடத்திற்குச் சென்றுவிட்டனர். இறந்தவர்களின் உறவினர்களைத் தொடர்ந்து தொடர்பு-கொண்டுவருகிறோம்.

பாலக்காடு எம்.பி வி.கே.ஸ்ரீகந்தன்

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், தற்போது காவல் துறையினர் ஈரோட்டில் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

இதையும் படிங்க:கொரோனா வைரஸ் அறிகுறி - மதுரை இராசாசி மருத்துவமனையில் இருவர் அனுமதி!

Last Updated : Feb 20, 2020, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.