திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் சேலம்-கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 19 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
பின்னர், பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்," அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மேலும், கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இருவர் படுகாயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்" என்றார்.
அவினாசி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் இறந்தவர்கள் விபரம்:
1.கோபிகா
2.ஜிஸ்மன் சஜூ
3.மாஸிகா மணிகண்டன்
4.ஜோபி பால்ஸி
5.அணு
6.பைஜூ
7.ஐஸ்வர்யா
8.ராகேஷ்
9.எம்.சி.மேத்யூ
10.சிவக்குமார்
11.கிரீஸ்
12.ஸனூப்
13.இக்னில் ரஃபி
14.சிவசங்கர்
15.இக்னி ராஜ்
16.விஜயகுமார்
17.நசீர்
18.ஜேசுதாஸ்
19.ரோஸ்லி ஜானி
இதையும் படிங்க: கமல், காஜல் நடித்த இடத்தில் விபத்து - 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடந்தது என்ன?