ETV Bharat / state

தண்ணீர் வாளிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை இறப்பு; சோகத்தில் உறவினர்கள் - tamil crime news

திருப்பூர்: தண்ணீர் வாளிக்குள் கனிஷ்கா என்ற ஒரு வயது குழந்தை விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 1 வயது குழந்தை இறப்பு! சோகத்தில் உறவினர்கள்

author img

By

Published : Jan 23, 2020, 3:06 PM IST

திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்துள்ள அவினாசி கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கண்ணன் - பாண்டியம்மாள் தம்பதி. இவர்களுக்கு ஒரு வயதில் கனிஷ்கா என்ற மகள் இருந்தார். பாண்டியம்மாள் நேற்று இரவு குழந்தையை வெளியே விளையாட விட்டுவிட்டு, வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார்.

தண்ணீர் வாளிக்குள் மூழ்கி ஒரு வயது குழந்தை இறப்பு!

வேலை முடித்துவிட்டு, பாண்டியம்மாள் வெளியே சென்று பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. உடனே பதற்றத்துடன் குழந்தையை பாண்டியம்மாள், அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். பிறகு வீட்டு வளாகத்தில் இருந்த தண்ணீர் வாளியில் குழந்தை கனிஷ்கா, தவறுதலாக விழுந்து, மூச்சு விடமுடியாமல் திணறிக் கொண்டு இருந்துள்ளார்.

உடனே குழந்தையை, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து கனிஷ்காவை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். மூச்சுத் திணறி உயிரிழந்த குழந்தையின் உடலைப் பார்த்து தாய் பாண்டியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது, அனைவரையயும் கண்கலங்கச் செய்தது. மேலும் இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: 'அரசின் திட்டங்களை முறையாக மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்போம்'

Intro:திருப்பூரில், தண்ணீர் வாளிக்குள் மூழ்கி 1 வயது குழந்தை இறப்பு.
Body:திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். பனியன் தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டியம்மாள். இவர்களது 1 வயது குழந்தை கனிஷ்கா. நேற்று இரவு பாண்டியம்மாள் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை கனிஷ்கா வீட்டின் வெளியே வளாகத்தில் விளையாடி கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் அக்கம்பக்கத்தில் குழந்தையை தேடிய போது வீட்டு வளாகத்தில் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளியில் குழந்தை கனிஷ்கா மூச்சு திணறியபடி கிடந்தாள் . உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். குழந்தையின் உடலை பார்த்து தாய் பாண்டியம்மாள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அனைவரையயும் கண்கலங்க செய்தது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.