உலகத்தின் சரித்திரத்தை புரட்டி போடப்பட்ட நாள் 1917ஆம் ஆண்டு நவம்பர் 7. தற்போதைய சூழலில் புரட்சி என்ற வார்த்தையின் ஆழம் தெரியாமலேயே எதற்காகப் பயன்படுத்தப்படுகிறோம் என்பதில் குழப்பங்கள் நீடித்து வருகிறது. 'புரட்சி' என்னும் சொல்லில் ஒரு வலிமை அடங்கியுள்ளது. புரட்சிக்குப் பின்னால் வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டியுள்ளது. அதன் வரிசையில், மக்களை அடக்கி ஆண்ட மன்னர் ஆட்சி, மக்கள் விரோத அரசுகளை நவம்பர் புரட்சி என்று கூறினாலே அந்தப் புரட்சியின் காட்சிகள் விரியும்.
அதன் அர்த்தங்களும் புரியத்தொடங்கும். ரஷ்யாவின் சோவியத் யூனியனை சாதித்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா சிறந்த முறையில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் புரட்சி தினத்தை அனுசரிக்கும் வகையில், திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாளை தொடங்கவுள்ள மக்களவைக் கூட்டத்தொடரில் இந்தியா தற்போது சந்தித்துள்ள மிக மோசமான பொருளாதார சீரழிவு குறித்து குரலெழுப்புவோம். அதேபோன்று மத்திய, மாநில அரசுகள் கீழடி அகழ்வாய்வு நடைபெற்ற இடத்தை பாதுகாக்கப்பட்ட இடமாக அறிவிக்க வேண்டும் கோரிக்கை வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அவிநாசி சாலையில் தொடங்கிய இந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் சிவப்பு சீருடையில் ஊர்வலமாக சென்றனர்.