ETV Bharat / state

திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள் - காரணம் என்ன?

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பீகார் மாநிலத் தொழிலாளர் கொலை செய்யப்பட்டு போடப்பட்டதாகக் கூறி வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்!

author img

By

Published : Mar 3, 2023, 5:42 PM IST

திருப்பூரில் ரயில் தண்டவாளத்தில் பீகார் மாநில தொழிலாளர் கொலை செய்யப்பட்டு போடப்பட்டதாக கூறி வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்தனர்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்களில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இதில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர், நேற்று (மார்ச் 2) நள்ளிரவு 1 மணியளவில், திருப்பூர் அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்த சஞ்சீவ் குமாரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே இன்று (மார்ச் 3) சஞ்சீவ் குமாரை கொலை செய்து, அவரது சடலத்தை தண்டவாளத்தில் போட்டு விட்டுச்சென்றதாக தகவல் பரவி உள்ளது.

இதன் காரணமாக ஏராளமான வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அவர்கள், சஞ்சீவ் குமாரின் மொபைல்போன் மற்றும் வாகனங்கள் ஆகியவை காணவில்லை எனவும், எனவே அவர் கொலை செய்யப்பட்டு அவரின் உடைமைகள் திருடப்பட்டு இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

அப்போது அவர்களிடம் காவல் துறை சார்பில் உரிய விசாரணை நடக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இருப்பினும், கலைந்து செல்லாமல் ரயில் நிலையத்தில் சஞ்சீவ் குமார் வந்து சென்றதற்கான ஆதாரங்களை காண்பிக்க வடமாநிலத் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறுகையில், ''நேற்று நள்ளிரவு 12.56 மணிக்கு கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று பார்த்தபோது சஞ்சீவ் குமார் சடலமாக இருந்தார்.

ரயிலை அவர் கடக்க முயற்சித்தபோது, ரயில் மோதி உயிரிழந்ததாக ரயிலை இயக்கி வந்த கருப்பசாமி வாக்குமூலம் அளித்ததைத் தொடர்ந்து, காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்களை தாக்குவதாக பரப்பப்படும் வீடியோக்களால், தற்போது வடமாநிலத் தொழிலாளர்களுக்கு கூடுதல் அச்சம் ஏற்பட்டதன் காரணமாகவே திருப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் குவிந்துள்ளதாகவும் காவல் துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர். மேலும் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உள்ளதாகவும், யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக மோசடியில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள்; வழக்கு பதிவு செய்யாமல் போலீஸ் அலட்சியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.