அமெரிக்கா, சீனா நாடுகளுக்கிடையே வர்த்தக போர் தீவிரமாகியுள்ளதால், பல்வேறு துறைகளிலும் இந்தியாவிற்கு வர்த்தக வாய்ப்பு பிரகாசமாக பெருகியுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை துறையில் வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளதால், பின்னலாடை உற்பத்தி செய்யும் நிட்டிங் இயந்திரங்களை அதிகமாக விற்பனை செய்வதற்கு சின்டெலி நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.
அதன் ஒருபகுதியாக நிட்டிங் இயந்திரங்களை திருப்பூரில் சின்டெலி நிறுவனம் கண்காட்சிக்கு வைத்துள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியில் ஜெர்மானிய தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இயந்திரங்கள் குறைந்த விலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அமெரிக்கா, இத்தாலி, சீனா உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த பின்னலாடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தற்போது இந்த கண்காட்சிகள் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.