ETV Bharat / state

"திருப்பூர் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படாது" - அமைச்சர் கே.என்.நேரு!

author img

By

Published : Jun 28, 2023, 9:28 PM IST

திருப்பூர் காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால், அத்திட்டம் வேறு பகுதிக்கு மாற்றப்படுவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

New Sewage treatment
காயிதே மில்லத்

"காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படாது" - அமைச்சர் கே.என்.நேரு!

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 45வது வார்டு காயிதே மில்லத் நகர் பகுதியில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த சுத்திகரிப்பு நிலையம் மூலமாக நொய்யல் ஆற்றின் துணை ஓடையான சங்கிலிப்பள்ளத்தில் வருகிற கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் ஆற்றில் விடத் திட்டமிடப்பட்டு இருந்தது. சுமார் 100 எம்.எல்.டி., அளவுக்கு கழிவு நீரை சுத்திகரிக்கக் கூடிய இந்தத் திட்டம் நொய்யல் ஆறு மேம்பாட்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக செயல்படுத்த தயாராகி வந்தது.

ஆனால், இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். பொதுமக்கள் குடியிருப்பு மற்றும் பள்ளிவாசல் உள்ளதால் அப்பகுதியில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என்று வலியுறுத்தினர். இத்திட்டத்தை கைவிடக்கோரி பல்வேறு கட்டங்களாகப் போராட்டம் நடத்தினர். கடந்த வாரத்தில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டிப் போராட்டம் நடத்தினர். இத்திட்டம் தொடர்பாக அப்பகுதி மக்களிடம் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனாலும், அப்பகுதி மக்கள் சுத்தரிப்பு நிலையம் அமைப்பதற்குத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று(ஜூன் 28) சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர் கே.என்.நேரு, அப்பகுதி மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஆனால், அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக்கூடாது என்றும், வேறு இடத்தில் இதனை நிறுவும்படியும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, இத்திட்டத்தால் ஏற்படும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறியும், அவர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதால், இத்திட்டம் மாற்று இடத்திற்குக் கொண்டு செல்லப்படுவதாகவும், இந்த இடத்தில் போடப்பட்ட மதிப்பை விட கூடுதல் மதிப்பீட்டில் மாற்று இடத்தில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை பேர்? ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.