திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், குடிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் சுமார் 604 பயனாளிகளுக்கு தலா எட்டு கிராம் தங்க காசு வழங்கப்பட்டது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று பயனாளிகளுக்கு தங்க நாணயத்தை வழங்கினார். மேலும் விழாவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கலந்துகொண்டு பேசுகையில், திருப்பூர் மாவட்ட மக்களுக்கு தொடர்ந்து பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த நான்கு நாட்களாக மாவட்டத்தில் இருக்கும் அனைத்து கிராமங்களுக்கும் சென்று நலத்திட்டங்களை வழங்கி வருவதாக கூறினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், இன்று 600க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது, மேலும் திருப்பூரில் சுமார் 200க்கும் அதிகமான பயனாளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.
மேலும் படிக்க: நேருவின் முடிவுதான் காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் - அமித் ஷா