திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பழைய சந்தைப் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் இந்தக் கடைகள் இடிக்கப்பட்டு புதிதாகக் கட்டுப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது. அதுவரை தற்காலிகமாக வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகள் நடத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேவையான வசதிகள் இல்லாத காரணத்தால், அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பிறகு சந்தையை இடிக்க வேண்டும். அதேபோல் புதிதாகக் கட்டப்படும் இடத்தில் எங்களுக்கான கடைகளை ஒதுக்கீடு செய்யும் உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
தற்போதுவரை எந்தவித உத்தரவாதமும் அளிக்காமல், இன்று காலை திடீரென மாநகராட்சி அலுவலர்கள் பொக்லைன் இயந்திரங்கள், காவல் துறையினர் பாதுகாப்புடன் கடைகளை இடிக்கவந்தனர். இதைக் கண்டித்து சந்தை வியாபாரிகள், திமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சட்டையைக் கழற்றிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென நடவடிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களை சந்தையில் நுழையவிடாமல், நுழைவுவாயிலில் அமர்ந்து அரைநிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'கரோனாவே தொலைந்து போ' - தீவிரமாகும் நடவடிக்கைகள்