ETV Bharat / state

வணிக நேரங்களை குறைப்பதாக வணிகர் சங்கம் அறிவிப்பு!

திருப்பூர்: பல்லடம் பகுதியில் கரோனா தொற்றை தடுக்கும் பொருட்டு வணிக நேரங்களை குறைப்பதாக வணிகர் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Merchant association trippur
All shops are closed in thiruppur
author img

By

Published : Jun 21, 2020, 2:58 PM IST

கரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வணிக நிறுவனங்களில் நேரங்களை குறைப்பதாக வணிகர் சங்கங்கள் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுவருகிறது.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதிகளிலும் வரும் 23ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 7ஆம் தேதி வரை வணிக நிறுவனங்களின் நேரங்களை குறைத்து செயல்பட முடிவு எடுத்திருப்பதாக பல்லடம் வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

அதன்படி பல்லடம் பகுதிகளில் இருக்கும் மளிகை, காய்கறி கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும், மற்ற வகையான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பேக்கரி, டீ கடைகள் போன்றவை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்றும் பல்லடம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.