ETV Bharat / state

நெகிழியை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்!

author img

By

Published : Oct 13, 2019, 9:44 AM IST

திருப்பூர்: நீர் மேலாண்மை, நெகிழியை தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.

marathon

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் மேலாண்மையை வலியுறுத்தியும் நெகிழி பயன்பாட்டினை குறைப்பதற்கான விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. நான்கு பிரிவுகளின் கீழ் 13, 14 வயதுக்குட்பட்டோருக்கு 3 கி.மீ , 11 கி.மீ என ஆண்கள், பெண் இருபாலருக்கும் போட்டிகள் நடைபெற்றது. இந்த மாரத்தானில் 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

விழிப்புணர்வு மாரத்தான்

மேலும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க வலியுறுத்தி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதையும் படிங்க: கோவையில், புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான்: 16 ஆயிரம் பேர் பங்கேற்பு

Intro:நீர் மேலாண்மையை வலியுறுத்தியும் நெகிழியை தவிர்க்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற மராத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். Body:திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர் மேலாண்மையை வலியுறுத்தியும் நெகிழி பயன்பாட்டினை குறைக்கும் விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும் மராத்தான் போட்டிகள் நடைபெற்றது. 13, 14 வயதுக்குட்பட்டோருக்கு முறையே 3கிலோ மீட்டர், 11 கிலோ மீட்டர் என ஆண்கள், பெண்கள் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கிய போட்டிகளை மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இதில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நெகிழி பயன்பாட்டினை தவிர்க்க வேடமணிந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மேற்கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.