திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராவனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், இரு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டின் அருகே வசித்துவரும் 13 வயது சிறுமி அவரது தோழியுடன் ஊர் ஒதுக்குப்புறத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது, பின் தொடர்ந்த சந்தோஷ்குமார் சிறுமியிடம் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு கொள்ள முயன்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமிகள் சத்தம் போட்டுள்ளனர். இதனிடையே, சிறுமிகளின் சத்தம் கேட்டு ஒன்று திரண்ட கிராம மக்கள் சந்தோஷ்குமாரைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து உதைத்துள்ளனர்.
பின்னர், குடிமங்களம் காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர். வழக்குப்பதிவு செய்த குடிமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆதம்பாக்கத்தில் நான்கு கஞ்சா வியாபாரிகள் கைது!