ETV Bharat / state

காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் தம்பதி; பாதுகாப்பு கேட்டு மனு! - Tiruppur district news

திருப்பூர்: காதல் திருமணம் செய்து கொண்ட இளம் தம்பதிகள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.

காயத்ரி
காயத்ரி
author img

By

Published : Aug 8, 2020, 5:04 PM IST

சிவகங்கை மாவட்டம் புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் காயத்ரி. இவர் அதே ஊரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் காயத்ரியை, அவரை விட 17 வயது மூத்தவரான தாய்மாமன் முத்துலிங்கம் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்க போவதாகக் கூறி, அங்கிருந்து 20 கிலோ மீட்டர் தூரமுள்ள மொசக்குடிக்கு காயத்ரியை அழைத்துச் சென்று உறவினர்கள் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், காயத்ரி அங்கிருந்து தப்பித்து அலெக்ஸ் பாண்டியனோடு திருப்பூர் சென்று கடந்த 2ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த முத்துலிங்கம், முருகன் உட்பட தாய் மாமனின் உறவினர்கள் அலெக்ஸ் பாண்டியனின் வீட்டிற்குச் சென்று அவர்களை எங்குப் பார்த்தாலும் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, காயத்ரி, அலெக்ஸ் பாண்டியன் ஆகிய இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.